ஸ்பெயினில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக 84 பேர் உயிரிழப்பு.!

ஸ்பெயினில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக 84 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 8 முதல் 10-ம் தேதி வரையிலான கால இடைவெளியில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் 45 டிகிரி அளவு வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளயதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Comments