2022-23ஆம் ஆண்டில் 2.50 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்து சாதனை..!

0 704

2022-23-ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக விவசாயிகளிடமிருந்து இரண்டு லட்சத்து 50ஆயிரம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய ராபி அறுவடை பருவத்தில், விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைப்பதற்காக கூடுதல் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் - ஜூன் மாதங்களில் ராபி பருவத்தில் அறுவடை செய்யப்படும் வெங்காயம், இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் 65 சதவீத பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments