பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி.!

0 1016

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. கொழும்புவில் உள்ள பல்பொருள் அங்காடிகள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பல அடுக்குகள் காலியாகவே காட்சியளிக்கின்றன.

முட்டை ,பிரெட் போன்றவை கிடைப்பதில்லை. உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வாகன எரிபொருளான பெட்ரோல், கேஸ், டீசல் போன்றவற்றுக்கும் கடும் தட்டுப்பாடு காணப்படுகிறது.

குடிமக்களின் சராசரி தினசரி வருவாய் சரிந்து வருகிறது.ஆனால் தினசரி செலவுகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments