ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் கோளாறு.. அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் விமான நிலையத்தில் அவசர நிலை.!

0 1054

ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், 222 பயணிகள் மற்றும் ஏழு விமான ஊழியர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதால் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையத்துக்கு வரவேண்டிய இதரவிமானங்கள் கோயமுத்தூருக்கும் கண்ணூருக்கும் திருப்பி விடப்பட்டன.

சுமார் ஒருமணி நேரம் கழித்து அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் சென்னை வரும் இண்டிகோ விமானம் புறப்பட அனுமதியளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments