இம்ரான் கான் மீது தேசத் துரோக வழக்கு போட பாகிஸ்தான் அரசு திட்டம்.!

0 1044

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கு போடுவது குறித்து ஆராயும் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசியல் அமைப்பின் 6-வது பிரிவை இம்ரான் மீறியது குறித்து ஆராய குழு அமைக்க பாகிஸ்தான் அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குழு, இம்ரான் கான் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை அப்போதையை துணை சபாநாயகர் Qasim Khan Suri ரத்து செய்ததில் அரசியலமைப்பு மீறப்பட்டதா உள்ளிட்டவைகளை விசாரிக்கும் என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments