மது அருந்துவதற்காக வாகனங்களில் வைக்கப்படும் பைகளை திருடி வந்த நபர் கைது

மது அருந்துவதற்காக வாகனங்களில் வைக்கப்படும் பைகளை திருடி வந்த நபர் கைது
செங்கல்பட்டு அருகே மது அருந்துவதற்காக வாகனங்களில் வைக்கப்படும் பைகளை தொடர்ந்து திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்பவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்தில் இருந்த பையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கணேசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், வேலைக்கு செல்லாமல் இருந்த கணேசன், சாலையோரம் நிற்கும் வாகனங்களில் உள்ள பைகளை திருடி அதிலுள்ள பொருட்களை விற்று மது அருந்தி வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments