அ.தி.மு.க. அலுவலக சீல் வழக்கு.. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கலவரம் குறித்த வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்த போலீசார், யாரிடம் சாவியை ஒப்படைப்பது என முடிவு செய்யாததால், அவை தரப்படவில்லை என தெரிவித்தனர். அப்போது, அலுவலகத்தில் சூறையாடி பொருட்களை பன்னீர்செல்வம் எடுத்துச்சென்றதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரின் அறிக்கை குறித்த ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்க திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கிய நீதிபதி,பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.
Comments