அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கம்

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கப்படுவதாக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கப்படுவதாக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் குறித்த தொலைபேசி உரையாடலை வெளியிட்ட குமரி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பு ரத்தினம், செயற்குழு உறுப்பினர் வளசை மஞ்சுளா பழனிசாமி உள்ளிட்ட 21 பேரும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments