குரங்கம்மை உறுதி : கேரளா முழுவதும் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குரங்கம்மை பாதித்தவர்களுடன் பயணித்த 5 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உடல்நிலை சுகாதாரப் பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், அந்த நபர் ஷார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் பயணித்த விமானத்தில் இருந்த பயணிகளும், விமான ஊழியர்களும் 21 நாட்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Comments