காலை 7 மணிக்கு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலையில், ஏன் உச்சநீதிமன்றம் 9 மணிக்கு கூடக்கூடாது..? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி

0 1064
நாட்டில் குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஏன் காலை 9 மணிக்கு தொடங்கக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி லலித் கூறியுள்ளார்.

நாட்டில் குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஏன் காலை 9 மணிக்கு தொடங்கக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி லலித் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லலித் தலையிலான அமர்வின் விசாரணை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

விசாரணையின் போது பேசிய நீதிபதி லலித், உச்சநீதிமன்றத்தில் காலை 9 மணிக்கு விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஏன் 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வரக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வழக்கமாக காலை 10.30 மணிக்கு கூடும் உச்சநீதிமன்றம் இன்று ஒரு மணி நேரம் முன்னதாக 9.30 மணிக்கு கூடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments