எம்.ஜி.ஆர் மாளிகை தனிநபர் சொத்து அல்ல.... அறிவாலயத்தை காப்பாற்றிய அம்மா..... இபிஎஸ் பேச்சு.

அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையை யாராலும் கைப்பற்ற முடியாது, அது தனிநபர் சொத்து அல்ல என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம் செல்லும் வழியில் உளுந்தூர் பேட்டையில் இபிஎஸ்-க்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்பு முதன்முறையாக சேலம் சென்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உளுந்தூர் பேட்டையில் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் வான வேடிக்கைகள் முழங்க, மேள தாளத்துடன், மலர்களை தூவி இபிஎஸ்-ஐ உற்சாகமாக வரவேற்றனர். மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் இபிஎஸ்-க்கு கும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர் 500 கிலோ மலர்களால் தொடுக்கப்பட்ட பிரமாண்ட மாலை கிரேன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அணிவிக்கப்பட்டது. 4 அடி உயர வெள்ளி செங்கோலும் இபிஎஸ்-க்கு நினைவு பரிசாக வழங்கப்பட்து.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு, அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதே மிகப்பெரிய சாட்சி என்று கூறினார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட துரோகிகளோடு சேர்ந்து கொண்டு திமுக அரசு, அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்திருக்கிறது என்றும் இபிஎஸ் கூறினார்.
Comments