கஞ்சா போதையில் தகராறு.. நண்பரை கத்தியால் வெட்டிவிட்டு தலைமறைவான இளைஞர் கைது.!

0 835

சென்னையில் கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகனத்தில் வந்த போது சக நண்பனை கத்தியால் வெட்டிவிட்டு 10 மாதங்களாக தலைமறைவான இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மடுவங்கரையைச் சேர்ந்த சுரேஷுக்கு, கஞ்சா அடிக்கும் இடத்தில் பிரியாணி, நொட்டு விக்கி ஆகியோர் பழக்கமாகியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் சுரேஷ், பிரியாணி என்ற இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த பிரியாணி, இதனை நொட்டு விக்கியிடம் கூறியதை அடுத்து, அவன் மடுவாங்கரைக்கு சென்று சுரேஷை அழைத்துக் கொண்டு மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

கிண்டி அருகே வந்த போது, நொட்டுவிக்கி தான் மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியால் சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயங்களுடன் பைக்கில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பிய சுரேஷ், போலீசில் அளித்த புகாரளித்த நிலையில், 10 மாதங்களுக்கு பின் நொட்டு விக்கியை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments