பிரிட்டன் பிரதமர் தேர்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 2-வது சுற்றிலும் முதலிடம்..!

0 1223

பிரிட்டன் பிரதமர் தேர்வில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 2-வது சுற்றிலும் முதலிடம் பிடித்தார்.

போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் இடையே புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 2வது சுற்று வாக்குப்பதிவில் 101 வாக்குகள் பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்தார். 83 வாக்குகள் பெற்று வர்த்தகத்துறை அமைச்சர் பென்னி மார்டண்ட் இரண்டாவது இடம் பிடித்தார்.

மற்றொரு இந்திய வம்சாவளியான சூவல்லா பிரேவர்மன் 27 வாக்குகள் பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார். 3-வது சுற்றுக்கு 5 பேர் தேர்வாகியுள்ள நிலையில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments