நிலச்சரிவில் புதைந்த பள்ளிக்கூடம்.. 3 பள்ளிக்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு.!

0 1027

கொலம்பியாவில், நிலச்சரிவில் பள்ளிக்கூடம் புதைந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்தன.

அண்டியோக்கியா மாநிலத்தில், ஆண்டீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமப்புர பள்ளிக்கூடம் ஒன்று புதைந்தது.

பள்ளியில் இருந்த 22 குழந்தைகளில் 17 பேர் நூலிழையில் தப்பி ஓடிய நிலையில், 5 குழந்தைகள் உள்ளே சிக்கி கொண்டனர்.

அவர்களில், 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments