கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் அலுவா மகாதேவா ஆலயத்தை சூழ்ந்த வெள்ள நீர்.!

கேரள மாநிலம் கொச்சியில் கனமழை காரணமாக பெரியாறின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து அலுவா மகாதேவா கோவில் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த தை அடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பாயும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பெரியாறின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அலுவாவில் மகாதேவா ஆலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கோவிலின் கர்ப்பகிரகம் உள்பட அனைத்து இடங்களிலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
Comments