அடுத்தடுத்து 3 ஏவுகணை வீசி ரஷ்யப் படைகள் தாக்குதல் - 21 பேர் பலி

0 837

மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ள நிலையில், போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வின்னிட்சியாவின் மையப்பகுதியில் உள்ள உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்த நிலையில், 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments