சென்னை சென்ட்ரலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.69 லட்சம் தங்கக்கட்டிகள், நகைகள் பறிமுதல்

0 1393

தெலுங்கானாவில் இருந்து ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 69 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் மற்றும் நகைகளை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது கோவையை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவரிடமிருந்து 1 கிலோ 484 கிராம் தங்கக்கட்டிகளும், நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் வணிகவரித்துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர்  4 லட்சத்து 16 ஆயிரத்து 350 ரூபாய் வரி விதிக்கப்பட்டு பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments