"நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைக்கும் தடைவிதிக்கவில்லை-ஓம் பிர்லா விளக்கம்

0 1053

சில வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எந்த வார்த்தைக்கும் தடைவிதிக்கப்படவில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தின் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் பட்டியலே தற்போதும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

கடந்த காலங்களில் புத்தக வடிவில் வெளியான வார்த்தை தொகுப்புகள், காகிகத்தை சேமிக்கும் வகையில் மின்னணு முறையில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments