இராசிபுரம் அருகே ஓடும் பேருந்தில் ஏறிய முதியவரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர்

0 22571

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓடும் பேருந்தில் ஏறிய முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர் முதியவரை சரமாரியாக தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ராசிபுரத்தை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தில் முதியவர் ஒருவர் ஏற முயன்றபோது தடுமாறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் முரளி கிருஷ்ணா, முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர், முதியவரை சரமாரியாக தாக்கினார்.

இதனிடையே தன்னை தாக்கிய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments