வெளிப்புறமாக பூட்டப்பட்ட வீட்டுக்குள் எரிந்த நிலையில் கிடந்த தாய், மகன் சடலம்-போலீசார் தீவிர விசாரணை

0 1788

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெளிப்புறமாக பூட்டப்பட்ட வீட்டுக்குள் தாய், மகன் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கம்பட்டியைச் சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் என்பவரது இரண்டாவது மனைவி கமலா, அவரது மகனும் வீட்டில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் செந்தாமரைக் கண்ணனுக்கு 3 மனைவிகள் இருப்பதாகவும் இரண்டாவது மனைவி கமலாவுக்கும் மூன்றாவது மனைவி சத்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நேற்றிரவும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆத்திரத்தில் சத்யாவே, இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments