கனடாவின் ஓன்டோரியோ நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை அவமதிப்பு - இந்திய தூதரகம் கடும் கண்டனம்

0 896

கனடா நாட்டின் ஓன்டாரியோ நகரில் விஷ்ணு மந்திர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டொரோன்டோ நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காழ்புணர்ச்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெறுக்கத்தக்க குற்றச்செயல், கனடாவில் வாழும் இந்திய மக்களின் மனதை புண்படுத்தியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments