ஆப்கானிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 39 பேர் பலி

0 916

ஆப்கானிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்குப்பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் 3ஆவது முறையாக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நிலச்சரிவுகளின் போது 40 ஆண்டுகால போர் மற்றும் தாக்குதல்களின் போது வெடிக்காத கண்ணிவெடிகள் வெளிப்பட்ட நிலையில் அவை பாதுகாப்பாக அகற்றப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வெடிக்கச் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments