வீட்டின் ஏசிக்குள் புகுந்திருந்த சுமார் 3 அடி நீள சாரைப்பாம்பு

0 2216

கடலூரில் வீட்டின் ஏசிக்குள் புகுந்திருந்த சாரைப்பாம்பு பத்திரமாக பிடித்து அகற்றப்பட்டது. செம்மண்டலம் பகுதியில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஏசிக்குள்ளிருந்து சத்தம் வந்ததுடன், பாம்பு தோல் உரித்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன.

இதையடுத்து ஏசி மெக்கானிக் மற்றும் பாம்பு பிடி வீரர் செல்லாவை வரவழைத்து ஏசியை கழற்றி பார்த்த போது உள்ளே சாரைப்பாம்பு இருந்தது. பின்னர் செல்லா பாம்பை லாவகமாக பிடித்தார்.

ஏசிக்கு வெளியே அவுட்டோர் யூனிட்டிலிருந்து பைப் லைன் அமைக்க போடப்பட்டிருக்கும் ஓட்டை அடைக்காமல் விடப்பட்டிருந்ததால் அதன் வழியாக பாம்பு புகுந்திருக்கும் என செல்லா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments