புதிய அரசு அமைப்பது குறித்து ரணில் விக்ரமசிங்கே அமைச்சர்களுடன் ஆலோசனை... பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றி சூறையாடிய போராட்டக்காரர்கள்!

0 953

புதிய அரசு அமைப்பது பற்றி தமது அமைச்சர்களுடன் இலங்கையின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்தியுள்ளார்.

நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே இடைக்கால அதிபராக ரணிலை நியமிக்கும்படி கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்று உள்ளதால், பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சியினரின் ஒப்புதல் பெற்ற நபரை நியமிக்கும்படி அவர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே ரணில் விக்ரமசிங்கே அலுவலகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள உடைமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

ராணுவத்தினர் போராட்டக்காரர்களை விரட்டி பிரதமர் அலுவலகத்தை மீட்டதாக அறிவித்த சற்று நேரத்தில் மீண்டும் போராட்டக்காரர்கள் அலுவலகத்தில் பெருமளவில் புகுந்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments