வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளான பேருந்து.. சிக்கித் தவித்த 35 பயணிகள்.. கயிறு கட்டி மீட்ட காவல்துறையினர்.!

0 1252

மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சந்திராபூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பேருந்து விபத்துக்குள்ளானது.

மத்திய பிரதேசத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற பேருந்து ராஜுரா தெஹ்சில் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தினை கடக்க முயன்றபோது இஞ்ஜின் பழுதாகி சிக்கிக் கொண்டது.

தொடர்ந்து, பேருந்தின் ஒட்டுநனரும், நடத்துனரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விட்டதால், அதிர்ச்சியடையந்த பயணிகள் செய்வது அறியாது தவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், பேருந்தில் சிக்கித் தவித்த குழந்தைகள் உட்பட 35 பயணிகளை கயிறு கட்டி மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments