ஸ்பெயினை வாட்டி எடுக்கும் அதீத வெப்பம் - 45 டிகிரி செல்சியஸை தாண்டியதால் மக்கள் அவதி

ஸ்பெயினில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி இருப்பதால், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அண்டலூசியா பிராந்தியத்தின் சில பகுதிகள், செவில்லி, கலீசியா உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சியான பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
நீர் ஊற்றுகளில் குவிந்த மக்கள் தண்ணீரில் விளையாடி வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
Comments