சாலையில் சென்றவர்களை சாக்கடையில் தள்ளிய போதை ஆட்டோ ஓட்டுனர்..! பிரீத் அனலைசருக்கே பிபி எகிற வைத்தார்

0 1397

கோவை துடியலூர் காவல் நிலையம் எதிரே, போதையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற ஆசாமி ஒருவன் சாலையோரம் நடந்து சென்ற மாணவி உள்ளிட்ட 3 பேரை இடித்து தள்ளி ஆட்டோவுடன் சாக்கடைக்குள் பாய்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோவை துடியலூர் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி அவர்களை சாக்கடைக்குள் தள்ளியதோடு, ஆட்டோவும் கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்தது.

சாக்கடைக்குள் விழுந்த பெரியவரையும் பள்ளி மாணவியையும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டனர். மற்றொரு பாதசாரி தலை மற்றும் முகத்தில் ரத்தத்துடன்சாக்கடைகால்வாய்யோரம் இருந்து மீட்கப்பட்டார்.

இறுதியாக இத்தனை களேபரத்துக்கும் காரணமாக அந்த ஆட்டோ ஓட்டுனரை கழிவுநீர்க் கால்வாய்க்குள் இருந்து மீட்டனர். காயம் பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

போதையில் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிச்சென்று இத்தனை களேபரங்களுக்கும் காரணமான தொப்பம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பரை ஆடை மாற்றி அழைத்து சென்று ப்ரீத் அனலைசரை வைத்து மது குடித்துள்ளாரா ? என சோதனை செய்யப்பட்டது.

சோதனையின் போது பிரீத் அனலைசரில் வாய் வைத்த அவர் தொடர்ச்சியாக ஊதாமல் உஷாராக போலீசுக்கு கடுக்கா கொடுக்க நினைத்தார். போலீசார் செல்லமாக ஒரு தட்டு தட்டியதால் அவர் ஊதியதால் மோகன்ராஜ் புல் போதையில் இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments