படிக்கிறத தவிர எல்லா சேட்டையும் இங்கே தான் ஆரம்பம்..! சாதி பிரச்சனையால் உருவான மோதல்..!

0 6046
படிக்கிறத தவிர எல்லா சேட்டையும் இங்கே தான் ஆரம்பம்..! சாதி பிரச்சனையால் உருவான மோதல்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை, ஊருக்குள் வந்து இரு தரப்பு மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வாய் தகராறை அடுத்து, இரு பிரிவாக சண்டையிட்டுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

இந்த தகவல் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியவந்த நிலையில் வேலங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் , கயப்பாக்கம் கிராமத்திற்கு தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் ஊருக்குள் புகுந்த எதிர்தரப்பினரை தடுப்பதற்காக பெண் ஒருவர் இளைஞரின் சட்டையை பிடித்து கடுமையாக சண்டையிட்டார். அந்தப்பெண்ணுக்கு ஆதரவாக உள்ளூர் சிறுவர்கள் பள்ளி மாணவர்கள் கையில் மரக்கட்டைகளை எடுக்க அவர்களை எதிர்தரப்பினர் அடித்து விரட்டினர்

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட நிலையில் அந்த கிராமத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிந்து மோதலில் ஈடுபட்டவர்களை வீடியோவை ஆதரமாக கொண்டு தேடி வருகின்றனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இரு கிராமங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளியில் பயிலும் சில மாணவர்கள் பள்ளியில் படிப்பதை தவிர, மற்ற விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவதால் இது போன்ற வீணான மோதல்கள் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments