சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி.. முதல் செமஸ்டர் வினாத்தாள் இரண்டாம் செமஸ்டரிலும் வழங்கப்பட்டது..!

0 917
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி.. முதல் செமஸ்டர் வினாத்தாள் இரண்டாம் செமஸ்டரிலும் வழங்கப்பட்டது..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குட்பட்ட 74 கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்த இரண்டாம் பருவத் தேர்வில் வினாத்தாள் குளறுபடி நடந்துள்ளது.

முதல் பருவத் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளை, இரண்டாம் பருவத் தேர்விலும் அச்சடித்து வழங்கியதால் மாணவர்கள் குழம்பினர்.

இதையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் இணையதளம் மூலம் அனுப்பி வைத்த புதிய வினாத்தாளை கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

சில கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வு வினாத்தாளை வைத்து இரண்டாம் பருவத் தேர்வை எழுதினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments