டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி சோதனை.. ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிப்பு..!

0 971
டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி சோதனை.. ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிப்பு..!

டோலோ 650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோலேப்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் அந்த நிறுவனம் தொடர்புடைய 36 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், அதன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த நெறிமுறையற்ற முறைகளில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு இலவச சலுகைக்காக செலவு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கணக்கில் காட்டப்படாத ஒரு கோடியே 20 லட்சம் ரொக்கம், ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments