பன்னீர் செல்வத்தை செல்போனில் அழைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..! எம்.ஜி.ஆர் ரசிகர்ன்னா சும்மாவா?

0 9149
பன்னீர் செல்வத்தை செல்போனில் அழைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..! எம்.ஜி.ஆர் ரசிகர்ன்னா சும்மாவா?

பாராட்டு கடிதம் அனுப்பிய, வேலூர் எம்.ஜி.ஆர் ரசிகர் பன்னீர் செல்வத்தை செல்போனில் தொடர்பு கொண்ட முதல் அமைச்சர் முக ஸ்டாலின், நானும் எம்.ஜி.ஆர் ரசிகர்தான் என்று பெருமையுடன் நன்றி கூறிய ஆடியோ வெளியாகி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்தவாரம் சுற்றுபயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து சென்னை திரும்பிய மு.க. ஸ்டாலினுக்கு வேலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரும் எம்.ஜி.ஆர் ரசிகருமான சேண்பாக்கம் பன்னீர் செல்வம் என்பவர் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அதில் நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன் என்று கூறினீர்கள்,அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு உங்களுக்கு வாக்களிக்காத எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இந்த பன்னிர்செல்வத்தின் வாழ்த்துகள் என்றும் மேலும் நீங்கள் வேலூர் வருகை தந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறுகள் இலாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம் எங்கள் தொழில் எந்த விதத்திலும் பாதிக்க வில்லை நீங்கள் வந்து சென்றதற்க்கான அறிகுறிகளே எங்களுக்கு தெரியவில்லை, ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து சென்றது எங்களை நெகிழச் செய்தது, இவை அனைத்தும் தங்களின் உத்தரவின் பேரில் தான் நடந்திருக்கும் என்பதை அறிகிறேன்வாழ்த்துகள் ஐயா என்று குறிப்பிட்டிருந்தார்

அந்த கடிதத்தில் கலைஞருடன் எம்.ஜி.ஆர் , எம்.ஜி.ஆருடன் , முக ஸ்டாலின் ஆகியோர் உள்ள புகைப்படங்களையும் அனுப்பி இருந்தார் . கடந்த 11 ந்தேதி இந்த கடிதத்தை படித்து பார்த்து நெகிழ்ச்சி அடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வத்தை செல்போனில் தொடர்பு கொண்டு நானும் எம்.ஜி.ஆர் ரசிகர் தான் என்று பாராட்டு கடிதத்திற்க்கு நன்றி தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments