அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை ஓடோடிச் சென்று காப்பாற்றிய பெண்மணி..!

0 1066
அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை ஓடோடிச் சென்று காப்பாற்றிய பெண்மணி..!

அமெரிக்காவில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்த வீட்டில் இருந்தவர்களை தக்க சமயத்தில் உஷார் படுத்தி பெண்மணி ஒருவர் காப்பாற்றினார். 

காரில் சென்று கொண்டிருந்த அந்த பெண்மணி தூரத்தில் புகை எழுவதை பார்த்து அந்த இடத்தை நோக்கி சென்றார். அங்கே ஒரு வீட்டின் கேரேஜ் பகுதி கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது.

உடனே விரைந்து செயலாற்றிய அந்த பெண்மணி, எரிந்து கொண்டிருந்த வீட்டிற்கு ஓடோடி சென்று உள்ளே தூங்கி கொண்டிருந்தவர்களை பல முறை அழைப்பு மணியை அடித்து காப்பாற்றினார்.

இதனால், அந்த வீட்டில் வசித்துவந்த தம்பதியும் அவர்களது 8 குழந்தைகளும் உரிய நேரத்தில்  மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments