சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்

0 1492
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், தனியார் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்லூரில் ஏராளமான வட மாநில மாணவர்கள் விடுதிகளிலும், கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீடுகளிலும் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திடீரென 50க்கும் மேற்பட்ட வட மாநில மாணவர்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்து சண்டையிட்டுக் கொண்டனர்.

இதுகுறித்த காட்சிகள் வெளியான நிலையில், மாணவர்கள் தாக்கிக்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments