அதிமுக பேரவை குழு : இரு தரப்பிடமும் கேட்ட பிறகே முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தகவல்..!

0 2747
அதிமுக பேரவை குழு : இரு தரப்பிடமும் கேட்ட பிறகே முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தகவல்..!

அதிமுக சட்டப்பேரவை குழுக்கள் தொடர்பாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ். என இரு தரப்பிடமும் விளக்கம் கேட்டப் பிறகே சபாநாயகர் முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ்.க்குரிய அதிமுக பதவியை நீக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றக் கூடாது என ஓ.பி.எஸ்-ம் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.

அதிமுகவில் 66 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ்-ம், துணைத் தலைவராக ஓ.பி.எஸ்.ம் உள்ளனர்.

இந்த நிலையில் இரு தரப்பிடமும் விளக்கம் கேட்டப் பிறகே சபாநாயகர் முடிவெடுப்பார் என சட்டப்பேரவை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments