ஜூலை 17ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி

0 917
ஜூலை 17ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்., வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 17 ஆம் தேதி நடைபெறும் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானத்தை அங்கீகரித்து உறுப்பினர்களின் கையெழுத்திட்ட மனுக்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments