உதகை அரசு மருத்துவமனையின் தடுப்புச் சுவர் 2 கார்கள் மீது இடிந்து விழுந்து விபத்து!

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனையின் தடுப்புச் சுவர், சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட கார் மீது இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து உதகை அரசு தலைமை மருத்துவமனையின் தடுப்பு சுவர் இடிந்து இரண்டு கார்கள் மீது விழுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், காருக்குள் சிக்கிக்கொண்ட ஒருவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Comments