அதிமுக தலைமையகத்துக்கு சீல்.. உரிய நடைமுறைகளை முடித்து, முறைப்படி விசாரணைக்குப் பட்டியலிடப்படும் - நீதிபதி

அதிமுக தலைமையகத்துக்கு சீல் வைத்ததை ரத்து செய்யக் கோரிய வழக்குகள் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று வழக்கமான நடைமுறைகளின் படி விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், சொத்துரிமை தொடர்பாகப் பிரச்சனை இருந்தால் மட்டுமே சீல் வைக்க முடியும் என்றும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல ஓ.பன்னீர்செல்வமும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்படாத நிலையில், அவசர வழக்காக விசாரிக்கும்படி நீதிபதி சதீஷ்குமாரிடம் எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் முறையிட்டார்.
Comments