20 ஆண்டுகளில் முதன்முறையாக டாலருக்கு நிகரான மதிப்பை அடைந்த யூரோ.!

0 5642

20 ஆண்டுகளில் முதன்முறையாக, யூரோவும் டாலரும் சம மதிப்பு பெற்றுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஐரோப்பியப் பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போது, 1 யூரோ என்பது 1 அமெரிக்க டாலருக்கு சமம்.பிப்ரவரி தொடக்கத்தில், யூரோவின் மதிப்பு 1 புள்ளி 13 டாலராக இருந்தது. ஆனால் பிறகு வியத்தகு அளவில் சரிந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முதன்மை எரிசக்தி விநியோக நாடான ரஷ்யா, மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக எரிவாயு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திவிடும் என்ற அச்சம் சமீபத்திய வாரங்களில் யூரோ மதிப்பில் மந்தநிலையை வேகப்படுத்தியுள்ளது.

இதுவரை, 12 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய எரிவாயு இறக்குமதியை குறைந்துள்ளன. இதன் விளைவாக யூரோவின் மதிப்பு டாலருக்கு நிகராக மாறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments