மாலத்தீவுக்கு தப்பினார் கோத்தபய ராஜபக்ச!

0 825

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று பதவி விலக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கோத்தபய பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் பதவி விலகக் கோரி அவரது மாளிகையை கைப்பற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி தலைமறைவானார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாக்கியுள்ளது.

இலங்கையில் புதிய அரசின் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் ஆன்டனவ் 32 ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்கு கோத்தபய ராஜபக்சே தப்பியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கோத்தபயாவின் விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்காமல் போனதாகவும், அதனால் விமானம் மாலத்தீவில் தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கோத்தபய துபாய் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், பண்டாரநாயகே விமான நிலையத்தில் வி.ஐ.பி சேவைகள் ரத்து செய்யப்பட்டு பொது கவுண்டர்கள் மூலமே மக்கள் அனுமதிக்கப்பட்டதால் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments