மீன்பிடி விதிமுறைகளை மீறி செயல்பட்ட 25 மீனவர்கள் மீது நடவடிக்கை

0 708

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி விதிமுறைகளை மீறி செயல்பட்ட 25 மீனவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை தடையினை மீறி பயன்படுத்திய தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டை, அக்கரைகோரி மற்றும் சொத்திக்குப்பம் மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை மீன்பிடிப்பிற்கு துணைபுரிந்த 6 நாட்டுப்படகுகளின் பதிவினை ரத்து செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments