போலீசை விமர்சித்தவரை அதே இடத்தில் கண்ணியமாக எச்சரித்த இன்ஸ்பெக்டர்..!

0 1614
போலீசை விமர்சித்தவரை அதே இடத்தில் கண்ணியமாக எச்சரித்த இன்ஸ்பெக்டர்..!

நெல்லையில் இந்து முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர் காவல்துறையினரை கடுமையாக விமர்சித்து பேசியதால் , பொறுமை இழந்த  காவல் ஆய்வாளர் ஒருவர் அவரை இடைமறித்து கண்ணியத்துடன் எச்சரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

காளி வேடத்தில் புகைபிடித்து சர்ச்சையை உண்டாக்கிய லீனாமணிமேகலையை கண்டித்து கைது செய்யக்கோரி நெல்லை பேட்டையில் இந்து முன்னணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர் ஒருவர், லீனா மணிமேகலையை இதுவரை கைது செய்யாத தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்து பேசினார்

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஹரிகரன் என்பவர் அவரது பேச்சால் பொறுமை இழந்து பேசிக் கொண்டிருந்தவரிடம் சென்று, நாங்களும் மனிதர்கள் தான், எங்களுக்கும் குடும்பம் இருக்கின்றது. பேசும் போது தயவு செய்து வார்த்தைகளை கொஞ்சம் பார்த்து பயன்படுத்துங்கள் என்று கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments