ஒரு சுங்கச்சாவடி வழியே பேருந்து எத்தனை முறை பயணிக்கும் என்பதன் அடிப்படையில் பாஸ் வழங்க நடவடிக்கை - உயர்நீதிமன்ற கிளை

0 1310
ஒரு சுங்கச்சாவடி வழியே பேருந்து எத்தனை முறை பயணிக்கும் என்பதன் அடிப்படையில் பாஸ் வழங்க நடவடிக்கை

ஒரு மாதத்தில் ஒரு சுங்கச்சாவடி வழியே பேருந்து எத்தனை முறை பயணிக்கும் என்பதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து ஒரு மாதத்திற்கு பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மாத சலுகை பாஸ் வழங்குவதை சுங்கசாவடி மையங்களில் முறைப்படுத்தக்கோரி மதுரை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் நல சங்கச் செயலர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதன் விசாரணையில், பேருந்துகள் மாதந்தோறும் பெறும் கட்டணச் சலுகை பாஸ், 50 முறை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் 10 நாட்களுக்குள் அவை முடிவடைந்து விடுவதாக நீதிபதி தெரிவித்தார்.

இதனால், பேருந்துகள் எத்தனை முறை பயணிக்கும் என்பதன்படி பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments