பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பு ? போலீசார் தீவிர விசாரணை.!

0 805

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரில், பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட விஜய குமார், பிரதீபா தம்பதியர் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது “டீ பார்” என்ற உணவகத்தில் வொயிட் பாஸ்தா சாப்பிட்டுள்ளனர்.

இரவு பிரதீபாவுக்கு உணவு செரிக்காமல் வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரதீபாவின் தந்தை தனது மகளுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்து விட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார். இதய அடைப்புக்காக பிரதீபா மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில், உடற்கூராய்வு முடிவில் தான் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments