மனைவியை ஆபாசமாகத் திட்டியதால் ஆத்திரம்.. நண்பனை வெட்டி கொலை செய்த கணவர்..!

0 847

சென்னையில், வீட்டில் தனியாக இருந்த மனைவியை ஆபாசமாகத் திட்டிய நண்பனை, கணவர் வெட்டி கொலை செய்தார்.

நாகல்கேணி மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த நண்பர்கள் பாண்டியன், சிரஞ்சீவி இடையே தொழில் போட்டியால் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறி உள்ளது.

மது போதையில் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்ற பாண்டியன், அவரது மனைவியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதை கேள்விபட்ட சிரஞ்சீவி, குடிபோதையில் தனது கூட்டாளி ஹரி என்பவனோடு சேர்ந்து பாண்டியனின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் வெட்டி உள்ளார்.

அங்கிருந்து தப்பி ஓட முயன்றவர்களை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments