ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றம்

0 842
ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, வெள்ளாளபுரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் போலீஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர். அப்போது ஜே.சி.பி முன்பு சூழ்ந்துக் கொண்ட மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்ற பின்னர் வீடுகள் இடிக்கப்பட்டன.

பின்னர், மக்கள் மேலும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டதையடுத்து பாதி வீடுகளை இடிக்காமலேயே அதிகாரிகள் திரும்பச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments