ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வுகான் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்

ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வுகான் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள வுகாங் நகரில் ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
3 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட வுகாங் நகரில் 3 நாட்களுக்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் வரை வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை தேவைகள் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments