தங்கையின் காதலனை மிதித்துக் கொன்று மூட்டை கட்டிய அண்ணன்..! கொத்தனார் பையனுக்கு நேர்ந்த சோகம்.!

0 1563
தங்கையின் காதலனை மிதித்துக் கொன்று மூட்டை கட்டிய அண்ணன்..! கொத்தனார் பையனுக்கு நேர்ந்த சோகம்.!

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய கொத்தனாரை கழுத்தில் மிதித்து கொலை செய்து, சடலத்தை மூட்டையாக கட்டி புதருக்குள் வீசியதாக மாணவியின் அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகுவிஜய் . கொத்தனார் வேலை செய்து வரும் இவர், இதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவரின் 17 வயது தங்கையை காதலித்து வந்துள்ளார்.

கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் அந்த மாணவி ஆரம்பத்தில் அழகு விஜய்யை கண்டுகொள்ளாமல், விலகிச்சென்றதாகவும், அழகு விஜய் தொடர்ந்து பின்னால் சுற்றி வந்ததால் ஒரு கட்டத்தில் காதல் வலையில் விழுந்ததாக கூறப்படுகின்றது.

முதலில் தனது தங்கையின் பின்னால் சுற்றும் அழகு விஜய்யை , அஜீத் கடுமையாக எச்சரித்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவும் இருவரையும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது தகறாறும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காதல் ஜோடிகள் இருவரும் சேடப்பட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற மாணவியின் அண்ணன் அஜித் தங்கையை கண்டித்ததுடன் அவர் கண் முன்பே காதலன் அழகுவிஜயை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரது கழுத்தில் ஓங்கி மிதித்ததில் அழகுவிஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தங்கையை அங்கிருந்து வீட்டிற்கு விரட்டி விட்டு, அழகுவிஜய்யின் சடலத்தை சேடபட்டி அருகே உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, தந்தை தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவித்துள்ளான் அஜீத்.

பின்னர் தந்தை மகன் இருவரும் சேர்ந்து சடலத்தை ஒரு சாக்கு பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து ஆத்தூர் அணையின் கரை ஓரத்தில் உள்ள புதருக்குள் தூக்கி வீசி உள்ளனர்.

காலையில் அந்தப்பகுதியில் ரத்தம் சொட்டு..சொட்டாக இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அழகு விஜய் மாயமானது குறித்து போலீசாருக்கு தகவல் தெரித்தனர் .

செம்பட்டி போலீசார் விசாரணையில், மாணவியின் தந்தை தமிழ்செல்வன் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, அணை பகுதி புதரில் அழகு விஜய், சாக்கு மூட்டையில் சடலமாக இருப்பதை அடையாளம் காட்டினார்.

சடலத்தை மீட்ட போலீசார், திண்டுக்கல் அரசு மருத்துலமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரிக்கு சென்ற பெண்ணை காதல் வலை விரித்து படிப்பை சீரழித்த ஆத்திரத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments