சின்ன பையன் என்ன பாவம் பண்ணினான்? சைக்கோ தந்தை விபரீதம்..!

0 1403
சின்ன பையன் என்ன பாவம் பண்ணினான்? சைக்கோ தந்தை விபரீதம்..!

மனைவி மீது இருந்த சந்தேகத்தால் ஒன்பது வயது மகனுக்கு உயிரோடு தீவைத்த தந்தையை அடித்து உதைத்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் , நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நீண்ட நாட்களாக தகராறு செய்து வந்துள்ளார். குறிப்பாக தனது 9 வயது மகன் தன் ஜாடையில் இல்லை என்பது தான் அவர் சந்தேகம் கொள்ள முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில், தனது மகன் என்றும் பாராமல் அந்த 9 வயது சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி வந்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார் ரமேஷ்

இதனைக் கண்ட சிறுவனின் தாய் மற்றும் பாட்டி உடனடியாக சிறுவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவனுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு விஷ மருந்தை வெளியில் எடுத்து சிறுவனை காப்பாற்றி உள்ளனர்.

சிறுவன் உயிர் பிழைத்துக் கொண்டதால், மாலை வீட்டிற்கு திரும்பிய நிலையில் கணவனின் அட்டகாசத்திற்கு பயந்து அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. மனைவி வீட்டுக்கு வராததால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் ,தனது மகனிடம் தாய் எங்கே என விசாரித்துள்ளான்.

அதற்கு சிறுவன் பதில் சொல்லாமல் நின்ற நிலையில், அவனை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்த ரமேஷ், அந்த சிறுவன் மீது மண்ணெண்னை ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளான்.

இதனைக் கண்ட அருகில் உள்ளவர்கள் ஓடிச்சென்று சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரே நாளில் இரு முறை மகனை கொலை செய்ய முயன்ற சைக்கோ தந்தை ரமேஷை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி வீடியோவை ஆதாரமாக கொண்டு ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments