உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய ராணுவ ஆயுதங்களின் கண்காட்சி..!

0 771

போரில் உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய ராணுவ ஆயுதங்கள், செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராகில் காட்சிப்படுத்தப்பட்டன.

பிராக் கோட்டையில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் லெட்னா சமவெளியில் T-90 ரக ரஷ்ய ராணுவ பீரங்கிகள், msta ரக ஹோவிட்சர் மற்றும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை காட்சிக்காக வைக்கப்பட்டன.

அதனைக் காண வந்த மக்கள், ஆயுதங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments