சென்னை விமான நிலையத்தில் ரூ.1.38 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் - 4 பேர் கைது..!

0 966

உள்ளாடைகள், காலணிகளில் மறைத்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தாய்லாந்து, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 பேர் உள்ளாடைகள், ஷூக்களில் மறைத்து தங்க கட்டிகள், தங்க பேஸ்டை கடத்தி வந்துள்ளது தெரியவந்தது.

அதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments